ஒரே இடத்தில் ரஜினி-அஜித் படப்பிடிப்பு.. சந்திப்பு நடக்குமா?
ஒரே இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் படப்பிடிப்பு நடைபெறுவதை அடுத்து இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதே கோகுலம் ஸ்டுடியோவில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பாடல் காட்சி ஒன்று நடைபெற்று வருவதாக தெரிகிறது
இந்த நிலையில் ரஜினி மற்றும் அஜித் ஆகிய இருவரது படங்களின் படப்பிடிப்பும் ஒரு ஸ்டூடியோவில் நடப்பதை அடுத்து இருவரும் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி அஜித்தை சந்தித்தால் என்ன பேசுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்