Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய், அஜித்தை இயக்குவீர்களா?... எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!

மீண்டும் விஜய், அஜித்தை இயக்குவீர்களா?... எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!
, புதன், 23 நவம்பர் 2022 (09:51 IST)
எஸ் ஜே சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அதையடுத்து அவர் நடித்துள்ள என்ற வெப் சீரிஸ் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ஓடிடி வெளியீடாக வர உள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எஸ் ஜே சூர்யாவிடம் மீண்டும் விஜய், அஜித்தை இயக்குவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “நான் ஹீரோவாக நடித்து இயக்கவே எனக்கு தேதிகள் இல்லை… விஜய், அஜித்தை மீண்டும் இயக்குவதற்கு கடவுள் அருள் புரியவேண்டும். அப்படி வாய்ந்தால் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தினார்!