Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி பேட்டி

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (12:34 IST)
நடிகரும், ஆன்மீக அரசியலை துவங்கியுள்ள ரஜினிகாந்துக்கு எதிராக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து வரும் கருத்துகள் ரஜினி ரசிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

 
செல்லும் இடமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருகிறார். 3 அமாவாசைகளுக்குள் கமல்ஹாசன் கட்சி காணாமல் போய் விடும் என்றார். அதன்பின், ஒரு தேர்தல் நடந்து முடிந்தால் கமல்ஹாசன் கட்சியே இருக்காது எனக்கூறினார்.
 
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என கருத்துக்கணிப்பு வெளியானதாக கூறுகிறார்கள். அது கருத்துக் கணிப்பு. யார் முதல்வர் என்பதை மக்களே  முடிவு செய்வார்கள். ரஜினிகாந்த் நல்லவர்தான். ஆனால், அவரின் குணத்திற்கு அரசியலில் இறங்குவது சந்தேகம்தான். மேலும், அவருக்கு 70 வயதாகி விட்டது. அவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியாது” என அவர் தெரிவித்தார்.
 
அவரின் இந்த பேட்டி ரஜினி ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்