பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும்  2.0. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
									
										
			        							
								
																	
	இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக  ஏமி ஜாக்சன் மற்றும் வில்லனாக அக்ஷய் குமார் நடித்து அசத்தியுள்ளனர்.
 
									
											
									
			        							
								
																	
	 
	தற்போது இந்த படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் ரசிகர்களின் படைப்பார்வத்தை வெளிக்கொண்டுவரும் நோக்கத்திலும் அவர்களது படைப்பை பாராட்டும் விதமாகவும் 2.0 குழுவினர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	அதாவது, 2.0 படம் சார்ந்தும் , சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த்தை சார்ந்து வரும் போஸ்டர்களையும், டிஜிட்டல் ஓவியங்களையும்  தேர்ந்தெடுத்து தினமும் அவர்களது பக்கத்தில் வெளியிடபோவதாக அறிவித்திருக்கின்றனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	ரஜினி ரசிகர்களையும் தாண்டி அனைத்து திரைத்துறை சார்ந்த ஆர்வம் உள்ள திறமைசாலிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.