மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

vinoth
திங்கள், 12 மே 2025 (10:36 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும்  ராஜமௌலி, அதன்பின்னர் தன்னுடையக் கனவுப் படைப்பான மகாபாரதத்தைப் படமாக எடுக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இதில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தோடு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ராஜமௌலி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments