தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறியப்படும் நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனாலும் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தானாக முன்னேறி வந்து கலக்கி வருகிறார் நானி. அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வருகின்றன.
இந்நிலையில் நானி நடித்த ஹிட் 3 படம் நேற்று ரிலீஸானது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனம் ஈர்த்தன. படத்தின் டிரைலரில் வன்முறைக் காட்சிகள் ரத்தம் ரத்தம் சொட்டப் படமாக்கப்பட்டு இருந்தன. இந்த அதீத வன்முறைக் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இயக்குனர் சைலேஷ் பதினெட்டு வயதுக்குக் கீழுள்ளவர்கள் பார்க்கவேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று படம் ரிலீஸான நிலையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் இந்த படம் தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமே சுமார் 17 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. ஹிட் படத்தின் நான்காம் பாகத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.