ஊர்ல இல்லாத நேரத்துல இப்படியா? பதறிப்போய் அறிக்கைவிட்ட லாரன்ஸ்

சனி, 27 ஏப்ரல் 2019 (10:45 IST)
நடிகர் ராகவா லாரன்சுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர். 
 
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு, 
 
காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. ரசிகர்கள், மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகளுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள், என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுபவர்களை பற்றி கவலைபடாதீர்கள்.
என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..  
 
நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம் என ராகவா லாரன்ஸ்  குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகர் சங்கத் தேர்தல் எப்போது ? – நாளை செயற்குழுக் கூட்டம் !