தளபதியா யாரு அது ? அஜித் பட நடிகையின் பதிலால் கடுப்பான ஆன விஜய் ரசிகர்கள்!

வியாழன், 25 ஏப்ரல் 2019 (19:04 IST)
தமிழ்  சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 


 
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் வேதா புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படத்தை குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரிடம் சில கேள்விகள் கேட்கபட்டது. அப்போது தலயா? தளபதியா ? என்று தொகுப்பாளர் கேட்க,  அதற்கு ஷ்ரத்தா தளபதியா.. ? மணிரத்னம் இயக்கிய தளபதி தானே என்று பதிலளித்தார். இதனை கேட்டு குபீர் சிரிப்பு சிரித்த ஆங்கரால் கடுப்பான ஷ்ரத்தா கடைசிவரை அந்த கேள்விக்கு பதில் தெரியாமல்  எஸ்கேப் ஆகிவிட்டார். 


 
இதனை கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கடுப்பில் "என்னதான் அஜித் படத்தில் நடித்தாலும் தளபதி என்றால் விஜய் என்று கூடவா தெரியாது என விமர்சித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திருநங்கையாக மிரட்ட வரும் சூப்பர் ஸ்டார்! காரணம் லாரன்ஸ்!