Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சனா 4 -மாஸ் அப்டேட்! இணையத்தில் வைரலாகும் முனி 5 பர்ஸ்ட் லுக்!

காஞ்சனா 4 -மாஸ் அப்டேட்! இணையத்தில் வைரலாகும் முனி 5 பர்ஸ்ட் லுக்!
, புதன், 24 ஏப்ரல் 2019 (14:28 IST)
காஞ்சனா 3-யை தொடர்ந்து காஞ்சனா 4 படத்திற்காக ராகவா லாரன்ஸ் பிரம்மாண்டமாக திட்டம்  தீட்டி வருகிறார்.

 
திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
 
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார். 
 
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 
முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகமாக  காஞ்சனா 3 சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படம் விரைவில் ரூ 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

webdunia

 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் இப்போது லாரன்ஸ் முடிவெடுத்துள்ளாராம். இந்த படத்தையும் சன் பிக்சர் நிறுவனமே தயாரிக்கவுள்ளது என தெரியவந்துள்ளது .அந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு தீர்மானித்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர் மன்ற பதவிகள் விற்கப்படும் – தனுஷைக் கிண்டல் அடித்த ரசிகர்கள் !