Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி பிளாக்பஸ்டர் ‘கில்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

இந்தி பிளாக்பஸ்டர் ‘கில்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

vinoth

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (14:58 IST)
பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது புல்லட் மற்றும் பென்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு  இயக்குனர் ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்பட்டது. ரமேஷ் வர்மா தெலுங்கில் கில்லாடி உளிளிட்ட ஆக்‌ஷன் படங்களை இயக்கியவர்.

இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன ‘கில்’ என்ற இந்தி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் #Karthi29 பிரம்மாண்ட துவக்கம்!