Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

vinoth

, செவ்வாய், 2 ஜூலை 2024 (07:40 IST)
சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஹண்டர் மற்றும் பென்ஸ் ஆகிய இரு படங்களின் முதல் லுக் போஸ்டர் ஒரே நாளில் வெளியானது. இதில் ஹண்டர் என்ற படத்தை  பாலிவுட் தயாரிப்பாளரான மனிஷ் என்பவர் பைனான்ஸ் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த படம் ராகவா லாரன்ஸின் 25 வது படம் என்ற பெருமைக்குரியது ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!