Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

Siva

, ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:54 IST)
பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் 25வது படம் என்ற மைல் கல்லை தொட்டுள்ள நிலையில் இந்த படத்தை இயக்கம் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் அதன் பிறகு சில படங்களை இயக்கினார் என்பதும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

தற்போது அவர் ’அதிகாரம்’ ’துர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதாவது 25 வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு  இயக்குனர் ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது 25வது படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவிக்குமாறு ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!