பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் சமீபத்தில் சில குழந்தைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உயர்ரக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் குணமாகி மீண்டும் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் காப்பகத்திற்கு சென்றதாக தகவல் வெளியானது. இதனை தனது டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த குழந்தைகள் விரைவில் குணமாகி காப்பகம் திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் கூறி உள்ளார்
மேலும் அந்த குழந்தைகளுக்கு தற்போதைய நிலையில் சத்தான உணவுகள் உணவுகள் தேவை என்பதால் தன்னால் முடிந்த உதவியை செய்திருப்பதாகவும் தன்னைப் போல் பிறரும் உதவி செய்ய வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
ராயபுரம் அரசு காப்பகத்தில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது