Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 4 விமானங்கள் புக் செய்த சூப்பர் ஸ்டார் !

Advertiesment
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு  4 விமானங்கள் புக் செய்த சூப்பர் ஸ்டார் !
, வியாழன், 11 ஜூன் 2020 (17:37 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 700க்கு மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சம் நேற்று 4 விமானங்களை ஏற்பாடு செய்தார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வருவதாகவும் அவர்களுக்கு உதவி தேவை என்பது குறித்து நடிகர் அமிதாப் பச்சம் அறிந்தார்.

எனவே, அவரது உத்தரவின் பேரில் ஏபி கார்ப்பரேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் யாதவ் சிறப்பு விமானஙக்ளை ஏற்பாடு செய்துள்ளார். மும்மையில் இருந்து வாரணாசி, கோரக்பூர், பிரக்யாரஜ் ஆகிய பகுதிகளுக்கு 180 பயணிகளுடன் இந்த விமானங்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமிதாப் பச்சன் 10 பேருந்துகளில் 300 புலம்பெயர் தொழிலார்களை படோஹரி உ,பி போன்ற இடங்களுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்தில் தோஷம் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு !