Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மாவின் பெயரை போலவே மகளுக்கு பெயர் சூட்டிய ராதிகா மகள்...!

Advertiesment
அம்மாவின் பெயரை போலவே மகளுக்கு பெயர் சூட்டிய ராதிகா மகள்...!
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:12 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான ராதிகா - சரத்குமாரின் குடும்பத்தில் இருந்து பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். ராதிகா சரத்குமார் தம்பதிக்கு பிறந்த  மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார்.

அதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  இதனால் ஒட்டு மொத்த  குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.அதையடுத்து  கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.

இந்நிலையில் தற்போது அந்த பாசத்தின் வெளிப்பாடாக தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன், இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அவர், 'என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.  நீ தைரியமானவளாக வளர வேண்டும். அவளுடைய பெயர் எனக்கு உயிர்  கொடுத்தவர்களிடமிருந்து வந்தது. எனக்கு தெரியும் அவர்களை போலவே இவள் நிறைய சாதனைகளை புரிவாள் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா - வீடியோ!