Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதாமோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘சட்னி சாம்பார்’ பூஜையுடன் தொடக்கம்!

Advertiesment
ராதாமோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘சட்னி சாம்பார்’ பூஜையுடன் தொடக்கம்!
, வியாழன், 20 ஜூலை 2023 (09:25 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக உருவாக்கப்படுகிறது.

ஜூலை 15 ஆம் தேதி பூஜையோடு தொடங்கிய இந்த படத்துக்கு சட்னி சாம்பார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வாணி போஜன், நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர் ராஜசேகர் & ஜீவிதா தம்பதியினருக்கு ஒரு ஆண்டு சிறை – 12 வருட வழக்கில் தீர்ப்பு!