Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுவன் கான்செர்ட்டில் நடனமாடி தெறிக்கவிட்ட சிம்பு! வைரல் ஆகும் வீடியோ!

யுவன் கான்செர்ட்டில் நடனமாடி தெறிக்கவிட்ட சிம்பு! வைரல் ஆகும் வீடியோ!
, திங்கள், 17 ஜூலை 2023 (07:37 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சிம்புவின் 48 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது சிம்பு மலேசியாவுக்கு சென்று யுவனின் கச்சேரியில் கலந்துகொண்டுள்ளார். இந்த கச்சேரியில அவர் தன்னுடைய படங்களில் இடம்பெற்ற யுவனின் இசையில் அமைந்த சில பாடல்களை பாடி நடனமாடி ரசிகர்களை கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

சிம்பு நடனமாடிக் கொண்டே பாடும் இந்த வீடியோக்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. பூஜையுடன் தொடக்கம்!