Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபு -சிம்பு-தேவன் பட டைட்டில் போஸ்டரை ரிலீஸ் செய்யும் வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன்

Advertiesment
venkat prabhu, vignesh shivan
, வெள்ளி, 14 ஜூலை 2023 (18:55 IST)
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சிம்புதேவன்.  இவர், வடிவேலுடன் இணைந்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305 ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், விஜய் உடன் இணைந்து  புலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்ததமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை மணிக்கு  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், ‘’புரடக்சன் நம்பர் 2 சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில், யோகி பாபு நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை சிம்புதேவன் இயக்கவுள்ளார்.  இப்படத்தின் டைட்டிலை நாளை மாலை  6 மணிக்கு இயக்கு நர் வெங்கட்பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வெளியிடவுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கல்லாம் பெரிய்ய ஒழுங்கு மாதிரி பேசுரதுதான் வியப்பா இருக்கு-சின்மயி டுவீட்