Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா & R J பாலாஜி இணையும் படத்தின் தொடக்கம் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (10:00 IST)
கங்குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கியது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. அதில் “நான் இந்த கதையை சூர்யா சாரிடம் ஒரு மணிநேரம் சொன்னேன். கேட்டு முடித்ததும் அவர் உடனே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றார். அவர் கடந்த 16 ஆண்டுகளாக எந்த கதையையும் இப்படிக் கேட்டதும் ஓகே சொன்னதில்லையாம். இதை அவரே என்னிடம் சொல்லி இந்த கதையை ஓகே செய்தார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சொர்க்கவாசல் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர் ஜே பாலாஜி அந்த படம் ரிலீஸானதும் அடுத்த நாளே ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரில் உள்ள கோவில் ஒன்றில் ஷூட்டிங்கை நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments