Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

தாமதம் ஆகும் சூர்யா 45 படப்பிடிப்பு… காரணம் இதுதானா?

Advertiesment
Suriya 45

vinoth

, வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:31 IST)
’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, மற்றும் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் தொடக்கத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சூர்யாவின் கங்குவா பட ரிலீஸை ஒட்டி சில வாரங்கள் தாமதமாக தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்காக சில கெட்டப் மாற்றங்களை சூர்யா செய்யவேண்டியுள்ளதால், அதற்கும் கொஞ்சம் காலம் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பச்சை துரோகி… என் எதிரிக்குக் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறான்’- மதயானைக் கூட்டம் இயக்குனர் ஆவேசப் பதிவு!