சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் , தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், வெளியான படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படம் சுமார் 300கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.
இந்நிலையில்,இப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி, சாமி உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தேவி ஸ்ரீபிரசாத்திற்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளதால் பாலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளர்களிடம் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. இதனால் மீண்டும் பிஸியாகியுள்ள தேவி ஸ்ரீபிரசாத் விரைவில் பாலிவிட்டில் கால்பதிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.