Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா பட வாய்ப்பை மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்! ஏன் தெரியுமா?

புஷ்பா பட வாய்ப்பை மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்! ஏன் தெரியுமா?
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:19 IST)
புஷ்பா படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் மகேஷ் பாபுவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தேர்வானவர் அல்லு அர்ஜுன் இல்லையாம். அவருக்கு முன்னதாக இயக்குனர் மகேஷ் பாபுவைதான் அனுகினாராம். ஆனால் கதாநாயகனின் குணாதிசயத்தில் எதிர்மறைப் பண்புகள் அதிகமாக இருப்பதால் அதில் நடிக்க தயங்கினாராம். ஆனால் இப்போது அல்லு அர்ஜுனுக்கு அந்த கதாபாத்திரம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச போதை உலகம்… கார்த்தியை இயக்கும் அருண்ராஜா காமராஜா!