விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

vinoth
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (09:39 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத்.  அவரின் பல ஹிட் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவை வைத்து அவர் இயக்கிய லைகர் படம் படுமோசமான தோல்வி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார்.  இந்த படத்தில் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.  பூரி ஜெகன்னாத்துடன் நடிகை ஷார்மி இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வீடியோ வெளியாக இருந்த நிலையில் கரூர் கூட்டநெரிசல் துயரசம்பவம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்துக்கு ‘ஸ்லன் டாக்- Slum dog’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

கத்தி, ரத்தம், சத்தம்… இந்த மூன்றை வைத்துதான் படம் எடுக்கிறார்கள்…SAC அதிருப்தி!

ரட்சகன் இரண்டாம் பாகம் எடுக்கப் போறேன்… பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் பிரவீன் காந்தி அறிவிப்பு!

மீண்டும் இணையும் தனுஷ்- சாய் பல்லவி ஜோடி… எந்த படத்தில் தெரியுமா?

என்னை நேஷனல் க்ரஷ்னு சொல்லும் போது மகிழ்ச்சியாகதான் இருக்கு… ஆனா? –ருக்மிணி வசந்த் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments