4 மடங்காக உயர்ந்த விளம்பர கட்டணம்:
தமிழ் திரைப்படங்களை விளம்பரம் செய்யும் இரண்டு பத்திரிகைகள் திடீரென நான்கு மடங்காக கட்டணத்தை உயர்த்தி விட்டதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது புதிய திரைப்படங்களை எப்படி விளம்பரப்படுத்துவது, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது பற்றி நிறைய ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம்
தற்போது விளம்பரங்களை வெளியிட்டு வரும் தினசரி தமிழ் பத்திரிகைகள் விளம்பர கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. எனவே நமது சங்கம் சார்பில் இன்னொரு பிரபல தினசரி பத்திரிகை இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாம் எதிர்பார்க்கும் கட்டணம் இருந்தால் அந்த பத்திரிகையிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு அனைவரும் அந்த பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும் முடிவு செய்யப்பட்டு உள்ளது
மேலும் நமது சங்கம் சார்பில் ஒரு டுவிட்டர் பக்கம் ஆரம்பித்து அதன் மூலம் நமது திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
இதன்படி தற்போது விளம்பரங்கள் சினிமா விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இரண்டு பத்திரிகைகளில் விளம்பரத்தை நிறுத்திவிட்டு புதிய பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது