மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரிமோதி கடும் விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினா. குஷ்புவுக்கு லேசான காயம் ஏற்படதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று கடலூரில் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டனர். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன், துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கடலூருக்கு இன்று சென்றனர்
சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஆனால் குஷ்புவுக்கு லேசான காயம் ஏற்படதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தன்னைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் சரியான பாதையில் சென்றதாகவும், கண்டெய்னர் லாரிதான் வந்து மோதியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா காலம் என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி தனது சமூக வலைதளத்தில் ஒரு டுவீட் பதிவிட்டார்.