Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.. மாஸ் வீடியோ வெளியீடு..!

Mahendran
வியாழன், 22 மே 2025 (12:20 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், அயலான் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஹீரோவாக மாறிய நிலையில், இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நயன்தாரா நடித்த அறம் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ராஜேஷ். அதன் பிறகு, குலேபகாவலி, ஐரா, ஹீரோ, டாக்டர், அயலான் உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்தார். மேலும் விஸ்வாசம் உள்பட சில படங்களை இவர் விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அவரே ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோ மூலம் அவர் ஸ்போர்ட்ஸ்மேன் கதாபாத்திரத்தில்  நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஹீரோவாக மாறிய நிலையில், தற்போது ஒரு தயாரிப்பாளரும் ஹீரோவாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கமல் படத்தில் இருந்து ஒதுக்கல்… ஹீரோவாக நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தும் லோகேஷ்!

மோடியை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள்… KPY பாலா & காந்தி கண்ணாடி படக்குழுவினர் மீது காவல்நிலையத்தில் புகார்…!

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் ஷூட்டிங் தாமதம்… பின்னணி என்ன?

இந்தி படங்களை இதனால்தான் தவிர்க்கிறேன்… மாளவிகா மோகனன் சொல்லும் காரணம்!

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments