தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லம் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகியுள்ளார். இதனால் அவர் தயாரிக்கும் படங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி, தனுஷ் நடித்து இயக்கும் இட்லி கடை ஆகிய படங்கள் விறுவிறுப்பாக பணிகள் நடந்த நிலையில், இந்த படங்களின் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டும் இன்றி, தலைமறைவாக உள்ள ஆகாஷ் பாஸ்கரன் ஒரு குறிப்பிட்ட தினங்களுக்குள் ஆஜராகவில்லை என்றால், அவர் தயாரிக்கும் இந்த இரண்டு படங்களையும், இயக்கி வருகிற இதயம் முரளி படத்தையும், முடக்க அமலாக்கத்துறை திட்டமிடலாம் என கூறப்படுகிறது.
இந்த 3 படங்களும் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால், அவை தற்போதைக்கு வெளியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், ஆகாஷ் பாஸ்கரன் வெளியே வந்து இந்த பிரச்சனைகளை முடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.