Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

Advertiesment
கமல்ஹாசன்

Siva

, புதன், 21 மே 2025 (18:33 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த தக்லைப் திரைப்படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியானவுடன், அவர் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் அந்த புதிய படத்தில், கமல் அதிரடியான ஆக்சன் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை வெறும் 45 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் படக்குழுவினரிடம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முழுக்க முழுக்க ஆக்சனை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படம், ஒரே நாள் இரவில் நடைபெறும் கதை அம்சத்துடன் வருகிறது. இதில் ஹீரோயின் இல்லாததால், லிப் லாக், டூயட் பாடல்கள் ஆகியவை எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
இதனால், முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் மட்டுமே இந்தப் படத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு ஆங்கில படத்தைப் பார்த்த உணர்வு, இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
 
இயக்குனர்கள் அன்பறிவ் வெறும் 45 நாட்களில் இப்படத்தை முடிக்க திட்டமிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!