Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் இந்திய நடிகை – கொரோனாவிலும் நடக்கும் ஷுட்டிங்?

மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் இந்திய நடிகை – கொரோனாவிலும் நடக்கும் ஷுட்டிங்?
, வெள்ளி, 10 ஜூலை 2020 (12:11 IST)
ஹாலிவுட் நடிகர் கீனு ரேவ்ஸ் நடிக்கும் மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற வெப் சீரிஸ் மூலமாக ஹாலிவுட்டுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் சில பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படமான மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
webdunia

இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே சில நாட்கள் நடித்த அவர் இப்போது மீண்டும் தொடங்கியுள்ள அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகனாக ஆக்‌ஷன் ஹீரோ கீனு ரீவ்ஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் அமேசான் ப்ரைமுடன் இரண்டு வருடத்துக்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜின் அடுத்த அவதாரம் –நண்பர்களுக்காக எடுத்த முடிவா?