Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் உடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்... விஜய் பட நடிகை அசத்தல் !

Advertiesment
Vijay film actress
, வியாழன், 2 ஜூலை 2020 (16:40 IST)
பாலிவுட்டில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அங்கு வசித்து வருகிறார்.

அத்துடன் , அவர் ஹாலிவுட் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வலைதளமான அமேசான் நிறுவனத்துடன் அவர் பல மில்லிய டாலர் மதிப்பில்  சீரியல் மற்றும் வெப் சீரிஸ் போன்ற தொடர்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உலமம் எங்கிலும் உள்ள திறமைகளை மட்டுமே வைத்து தரமானபடைப்புகளை தருவதை நோக்கமாகக் கொண்டது.  எனது அடுத்த முயற்சிக்கு அமேசானுடனான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்து தனக்கு ஆத்ரவு தரும் ரசிகர்களுக்கு  அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர் விஜய்  நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிம்மா சரி... நீ ஒல்லியா ஆகிட்டேன்னு ஒத்துக்குறோம் - அலப்பறை பண்ணும் யாஷிகா!