Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென ரம்பாவை நினைவுப்படுத்தும் பிரியா பவானி சங்கர் – காரணம் இந்த புகைப்படம்தான்!

திடீரென ரம்பாவை நினைவுப்படுத்தும் பிரியா பவானி சங்கர் – காரணம் இந்த புகைப்படம்தான்!
, ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:15 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் தனது புதிய கிளாமர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கிவரும் பிரியா பவானி சங்கர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா இப்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் தொடையழகி ரம்பாவை நினைவுப்படுத்தும் விதமாக இந்த புகைப்படம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகளின் பங்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கங்கனா!