Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப் ரசிகர்களுக்கு நாளைக்கு செம்ம விருந்து!

Advertiesment
கேஜிஎஃப் ரசிகர்களுக்கு நாளைக்கு செம்ம விருந்து!
, ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:09 IST)
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் இப்பொது படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் படக்குழுவினரிடம் ’ கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறோம். எங்கள் அற்புதமான ரசிகர்களுக்காக ஒரு சடங்கு போல டிசம்பர் 21 அன்று வழக்கமாக நாங்கள் பின்பற்றும் ஒரு விஷயம். இந்த வருடமும் அது நடக்கும். 21 டிசம்பர் காலை 10.08 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்களளிடம் ஒரு விருந்து. பொறுமையாக இருந்ததற்கும் இந்தப் பயணத்தில் எங்களுக்கு ஆதரவு தந்ததற்கும் நன்றி’ எனக் கூறியுள்ளனர். ஆனால் என்ன விருந்து என குறிப்பிட்டு சொல்லாததால் ஒருவேளை டீசர் வெளியாகலாம் என ரசிகர்களே கற்பனை செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்தின் ரிலீஸைப் பொறுத்துதான் சுல்தான் ரிலீஸ் ! தயாரிப்பாளர் முடிவு!