Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படத்தில் விஜய்யின் அரசியலும் இருக்கு… பிரேம்ஜி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

கோட் படத்தில்  விஜய்யின் அரசியலும் இருக்கு… பிரேம்ஜி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

vinoth

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:20 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி “படத்தில் டி ஏஜிங் விஜய்க்கு நான்தான் மாமா. முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் தளபதி ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் காட்சிகள் உள்ளன. உதாரணமாக விஜய்யின் கார் நம்பர் CM2026 (முதலமைச்சர் 2020)என வைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா