Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு படத்திற்கு ஹைப் நல்லதில்ல.. மனம்விட்டு பேசிய ’கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..!

Advertiesment
ஒரு படத்திற்கு ஹைப் நல்லதில்ல.. மனம்விட்டு பேசிய ’கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா  கல்பாத்தி..!

Mahendran

, சனி, 31 ஆகஸ்ட் 2024 (17:00 IST)
ஒரு படத்திற்கு ஹைப் நல்லதெல்ல என்றும் அதிகமான எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்கள் ஓரளவு எதிர்பார்ப்பு குறைந்தால் கூட அதிருப்தி அடைவார்கள் என்றும் கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தெரிவித்துள்ளார்
 
ஹைப்  என்பது மிகையான எதிர்பார்ப்பு, அது ஒரு படத்திற்கு நல்லது கிடையாது, அது ஒரு புத்தகத்தை படித்துவிட்டு படம் பார்ப்பது போன்ற விஷயம் என்று தெரிவித்தார். ரசிகர்கள் அனைவருமே மனதில் தங்களுக்கு என்ன ஒரு எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள், ஒரு இயக்குனர் அனைவரது எண்ணங்களையும் உணர்ந்து படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தெரிவித்தார்.
 
அதனால்தான் கோட் படத்திற்கு அதிகமான ஹைப் இருக்க கூடாது என முன்பே முடிவு செய்து குறைவான அப்டேட் கொடுத்தோம், அதன்பின் நேரடியாக ட்ரைலரை  வெளியிட்டோம் என்றும் அவர் கூறினார்
 
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கோட்’ படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களின் திருமண வயது 21 என்ற சட்டம் புரட்சிகரமானது: ராமதாஸ் பாராட்டு..!