Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோப்பு நுரையுடன் கவர்ச்சியான போஸில் பிரகதி! கவனம் ஈர்த்த புகைப்படம்!

Advertiesment
Pragathi Guruprasad
, வெள்ளி, 12 மார்ச் 2021 (14:53 IST)
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இவர் இயக்குனர் பாலா இயக்கும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது உடலில் சோப்பு நுரையோடு இருப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் ராய் லட்சுமி!