Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடல்தண்ணீரில் விளையாடும் சூப்பர் சிங்கர் பிரகதி… வைரலான புகைப்படம்!

கடல்தண்ணீரில் விளையாடும் சூப்பர் சிங்கர் பிரகதி… வைரலான புகைப்படம்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:06 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பிரகதி சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இவர் இயக்குனர் பாலா இயக்கும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது கடல்கரையில் தண்ணீரோடு விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட அது அவரின் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி இவர்தான் – வெளியான ரகசியம்!