மேயாத மான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்பட 7 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றின் தமிழ் ரீமேக் தற்போது உருவாக உள்ளது
மலையாள ரீமேக் படத்தில் ப்ரியா பவானிசங்கர்
இயக்குனர் சுமந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தை டிரைடெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் தான் பிரியா பவானிசங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது என்பதும், இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகிய இருவரும் முதல் முறையாக இணையும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது