நடிகர் விஜய்யை இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின்போது கலக்குறீங்க ப்ரோ என விஜய், டிராகன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிராகன் படக்குழுவினர் நேற்று சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்படத்திற்காக உழைத்த அனைவரையும் விஜய் மனதாரபாராட்டியதாகவும், குறிப்பாக, அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் பிரதீப்புக்கு விஜய் ஸ்பெஷல் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரதீப் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில், "விஜய் சார் என்னைப் பார்த்து கலக்குறீங்க ப்ரோ என்று சொன்னார்... தளபதியின் வாயிலிருந்து இப்படியொரு பாராட்டு கேட்கும்போது என்ன உணர்ந்திருப்பேன்? அதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்! எங்களை நேரில் சந்தித்து, நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சார். சச்சின் படத்தின் மறுவெளியீட்டுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த சச்சின் திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. தற்போது, அதனை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அதன்படி ஏப்ரல் 18-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.