Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவின் அடுத்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமன்னாவின் அடுத்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, சனி, 9 மார்ச் 2019 (17:37 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா, பிரபுதேவாவுடன் இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு 'தேவி' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது.
 
முதல் பாகத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் 'தேவி 2' படத்தையும் இயக்க, இந்த படத்தை பிரபுதேவாவே தயாரித்து வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 12 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.
 
சாம் சிஎஸ் இசையில் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில், அந்தோனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஜெகன், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அழகு தேவதை சாயிஷா! வைரல் வீடியோ