Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவாவின் 'தேவி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவாவின் 'தேவி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 27 பிப்ரவரி 2019 (22:02 IST)
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் விஜய், ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் இன்னொரு பக்கம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பையும் கவனித்து வந்தார்.
 
இந்த நிலையில் தற்போது 'தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சர்ளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், சோனுசூட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ் கார்டனில் வீடா...? ஜெயம் ரவி ரியாக்‌ஷன் இதான்!