Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பி பட வசனம்… பத்திரிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்த பிரபுசாலமன்!

செம்பி பட வசனம்… பத்திரிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்த பிரபுசாலமன்!
, சனி, 31 டிசம்பர் 2022 (10:08 IST)
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி திரைப்படம் நேற்று வெளியானது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன. இதையடுத்து அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதியில் இயேசு கிறிஸ்துவின் வசனம் ஒன்றை இடம்பெறச் செய்திருந்தனர். அதுகுறித்து நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அந்த வசனத்தை சுட்டிக் காட்டிய சில பத்திரிக்கையாளர்கள் “நீங்கள் மதப் பிரச்சாரம் செய்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பிரபு சாலமன் “கிறித்துவம் ஒரு மதம் இல்லை. அதை அன்பாகதான் நான் பார்க்கிறேன். மதத்தைப் பரப்பவும் இயேசு கிறிஸ்து வரவில்லை” எனப் பதிலளித்தார். ஆனாலும் விடாமல் “இதே போன்ற போதனை பகவத் கீதையிலும் உள்ளது” என சொல்ல, அவர்களுக்கு மீண்டும் பதிலளிக்க வாக்குவாதமாக மாறியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்திடம் வேட்டி சட்டை வாங்கி கட்டிய ரஜினி… சுவாரஸ்ய தகவல்!