Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்திடம் வேட்டி சட்டை வாங்கி கட்டிய ரஜினி… சுவாரஸ்ய தகவல்!

Advertiesment
விஜயகாந்திடம் வேட்டி சட்டை வாங்கி கட்டிய ரஜினி… சுவாரஸ்ய தகவல்!
, சனி, 31 டிசம்பர் 2022 (10:00 IST)
நடிகர் விஜயகாந்த் தலைமையில் 2002 ஆம் ஆண்டு மலேசியா சிங்கப்பூரில் நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியை நடத்தினார்.

நடிகர் சங்க கடனுக்காக முன்னணி நடிகர்களை அழைத்து சென்று விஜயகாந்த் இந்த கலை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். இதில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார், சத்யராஜ், மீனா, சிம்ரன் என அக்காலத்தைய அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் தயாரிப்பாளர் காஜா மொய்தீன். அவர், இப்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த விழாவுக்கு வந்த ரஜினி தன்னுடைய சூட்கேஸை தொலைத்துவிட்டார். அதில்தான் அவரின் ஆடைகள் அனைத்தும் இருந்தன. நான் உடனடியாக ட்ரஸ் எடுக்க செல்ல இருந்தேன். ஆனால் ரஜினி சார் “வேண்டாம் விஜயகாந்திடம் வேட்டி சட்டை இருக்கும். அதை வாங்கி வாருங்கள்” என சொல்லி, அவரின் சட்டை வேட்டியை கட்டி மேடையில் தோன்றினார்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேனேஜரால் ஹிட் பட வாய்ப்பை இழந்த நடிகர் அப்பாஸ்…பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியிட்ட தகவல்!