பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ராஜாசாப் படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அடுத்தடுத்த சிக்கல்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் நேற்றோடு இந்த படத்தில் தனது காட்சிகளை முழுவதுமாகப் படமாக்கி முடித்துள்ளார் பிரபாஸ். இயக்குனர் மாருதி படப்பிடிப்புத் தளப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து “23 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதே நாளில் ராஜாசாப் படத்தில் அவர் பயணத்தை முடிக்கிறார்” எனக் கூறியுள்ளார். இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.