Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குனர் மாருதியோடு இணைந்த பிரபாஸ்… வெளியான அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மாருதியோடு இணைந்த பிரபாஸ்… வெளியான அறிவிப்பு!
, சனி, 29 அக்டோபர் 2022 (10:25 IST)
பிரபாஸ் தற்போது மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர் பிராஜக்ட் கே, சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பக்கா கமர்ஷியல்” படம் கவனிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்தை சந்தித்த காந்தாரா பட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்!