காந்தாரா படத்தை சமீபத்தில் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ” தெரிந்ததைக் காட்டிலும் தெரியாததே அதிகம். அதை இப்படத்தைக் காட்டிலும் யாராலும் சொல்லியிருக்க முடியாது. இப்படத்தைப் பார்த்தேன். என்னை மெய்சிரிக்க வைத்தது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்பு” எனப் புகழ்ந்திருந்தார்.
இதையடுத்து படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.