Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… இயக்குனர் மேல் பிரபாஸுக்கு கோபமா?

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… இயக்குனர் மேல் பிரபாஸுக்கு கோபமா?
, புதன், 5 அக்டோபர் 2022 (10:02 IST)
ஆதிபுருஷ் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கார்ட்டூன் படம் போல இருப்பதாக கூறி கேலி விமர்சனங்கள் எழுந்தன.

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத் மேல் கோபமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில் கோபமாக பிரபாஸ் “ஓம் என் அறைக்கு வாங்க” என சொல்லிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகரத்து முடிவைக் கைவிடுகிறார்களா தனுஷ்- ஐஸ்வர்யா?