பாகுபலி நாயகன் பிரபாஸ் ஏற்கனவே ராதே ஷ்யாம் மற்றும் நடிகையர் திலகம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் என்ற படத்தில் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமானதாகவும், ஓம் ராவத் என்பவர் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் இந்த படம் ராமாயணம் கதையின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரபாஸ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு