Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப் பொருள் வழக்கு – தீபிகா படுகோன் மேலாளர் தலைமறைவு?

Advertiesment
போதைப் பொருள் வழக்கு – தீபிகா படுகோன் மேலாளர் தலைமறைவு?
, புதன், 28 அக்டோபர் 2020 (10:48 IST)
பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்திய போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் விசாரிக்கப்பட இருந்த தீபிகா படுகோனின் மேலாளர் தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல முன்னணி நடிகர், நடிகைகள் பெயர் அடிப்படும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷ்ரதா கபூருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் “சிச்சோரே” என்ற படத்தில் நடித்தவர் ஷ்ரதா கபூர். சுஷாந்தின் விருந்தினர் இல்லத்தில் போதை பார்ட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் ஷ்ரதா கபூரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மேலும் தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசிக்கொள்ள உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குருப்புக்கு அட்மினாக தீபிகா படுகோன்தான் இருந்தார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தீபிகாவின் மேலாளர் ஏறகனவே விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் வீடு பூட்டி இருப்பதால் அவர் வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்‌ஷரா ஹாசன் – அக்னிசிறகுகள் படக்குழு அதிரடி முடிவு!