Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் மேதகு… ஓடிடியில் ரிலிஸ்!

Advertiesment
பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் மேதகு… ஓடிடியில் ரிலிஸ்!
, வெள்ளி, 25 ஜூன் 2021 (12:22 IST)
தமிழீழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்றுவித்தவர் வே பிரபாகரன்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக உருவாகியுள்ளது மேதகு. அதில் அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும் அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையையும், காட்சி படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழி போராட்டத்தை தேர்ந்தேடுத்தார் என்பதும் காட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் இப்போது ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக உள்ளது.

BS value OTT தளத்தில் பணம் கட்டி பார்க்கும் வசதியுடன் இந்த இன்று முதல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெயின் பிளேஸ் மட்டும் மறைச்சு பாலிவுட் நடிகைகள் நடத்திய போட்டோ ஷூட்!