நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ள படத்தை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் கங்க்னா ரனாவத். இதையடுத்து அவர் தற்போது பல மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கங்கனா நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எமெர்ஜென்ஸி என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தை கங்கனாவே இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மணிகர்ணிகா படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.